யாழில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து மரண அச்சுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில். ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை , முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை தாக்க முற்றப்பட்ட போது , அயலவர்கள் கூடியமையால் , தாக்குதல் முயற்சியை கைவிட்டு, மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு, அங்கிருந்து சென்றதாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த நிலையில் , அதனை அகற்ற கோரியே குறித்த கும்பல் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting