உலகளாவிய ரீதியாக தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன.

லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply