நாஹினி சிவன்யாவை பார்க்க பொலன்னறுவையில் இருந்து யாழ் வந்த சிறுமிகள் – பரபரப்புத் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாஹினி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகையை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொலைக்காட்;சி தொடர்களில் நடிப்பவர்களை காண்பதற்காக சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.

13,11.7 வயது சிறுமிகள் மூவர் ஹிங்குராங்கொடையிலிருந்து நாஹினி நடிகையை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர்,என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறி யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் யாழ்ப்பாணத்தில் இடம்தெரியாமல் தடுமாறிய அவர்கள் ஒருவாறு நிலைமையை சமாளித்து அன்று மாலை வீடு திரும்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெற்றோர் ஏற்கனவே பொலிஸரிடம் முறைப்பாடு செய்தமையால் பொலிஸார் சிறுமிகளிடம் விசாரணையை மேற்கொண்டவேளை சிறுமிகள் நாஹினி சிவன்யாவை பார்ப்பதற்காக சென்றமை தெரியவந்துள்ளது.

சிறுமிகள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் சிவன்யாவை பார்க்கசெல்லவேண்டும் என தாங்களே திட்டமிட்டுள்ளனர்,பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்று சிவன்யாவை பார்க்கலாம்- யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறிய தூரம் என அவர்கள் கருதியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகள் மூவரும் தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையானவர்கள் – தொலைக்காட்சி தொடர்களில் தோன்றுபவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சி தொடர்களை பார்வையிட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகள் பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பொலிஸார் தொலைக்காட்சிகளிலும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களிலும் பிள்ளைகள் என்ன பார்க்கின்றனர் என்பதை பெற்றோர் அவதானிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நான் பிள்ளைகளை குற்றம்சொல்லமாட்டேன் அவர்கள் சிறியவர்கள் அவர்களிற்கு உலகம் எப்படிப்பட்டது என்பது தெரியாது பெற்றோர் அவர்களை அவதானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி இவ்வாறான நாடகங்களை குழந்தைகள் பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply