காலிஸ்தான் தீவிரவாதிகளின் சொத்துகள் முடக்கம் – இந்தியா அதிரடி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகளை முடக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துக்கு இந்தியாவுக்கு தொடர்பிருபதாக கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள் சீக்ஸ் ஃபார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ நேற்று முன்தினம் முடக்கியது.

அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிர வாதிகள் 19 பேரின் சொத்துகளை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply