நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதன்படி, அத்தனகலு, களு, களனி, கிங் மற்றும் நில் வலா ஆற்றுப்படுகைகளில் நிலப்பரப்பில் நீர் நிரம்பியுள்ளதால், குறித்த ஆறுகளில் ஒன்று அல்லது பலவற்றில், அதிக மழை பெய்யும் பட்ஷத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆற்றுப்படுகைகளில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமொறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Follow on social media