மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Follow on social media