மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடி படகு ஒன்று கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனை தெரிவித்தார்.

ஈரானிய கப்பலுடன் குறித்த கடற்பரப்பிற்கு கடற்கொள்ளையர் குழுவொன்று வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply