தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்னாபிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரிய தீப்பிழம்புகள் மற்றும் பெரும் புகை மூட்டம் வான் நோக்கி எழுந்ததுடன், தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்றும் கண்டறியப்படாத நிலையில் பாதிப்படைந்தோர் விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

தீ மூன்றாவது மாடி அலுவலகங்களில் தொடங்கி தேசிய சட்டமன்ற அறைக்கும் பரவியது என்று உள்ளூர் தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தீயை கட்டுப்படுத்த 35 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply