திருமண நிகழ்வில் சண்டை – 6 பேர் வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது மணமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாப்பிள்ளையால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் ஹோட்டலின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

நீச்சல் குளத்தில், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்களுடனான வாக்குவாதம் அதிகமாகி, அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்து தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply