சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – கணவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காணாமல் போயிருந்த பங்களாதேஷின் பிரபல நடிகையான 45 வயதுடைய ரைமா இஸ்லாம் ஷிமு சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, பாலத்தின் அருகே சாக்குமூட்டைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், நடிகையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், அவரின் உடலில் பல காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply