பேருந்திலிருந்து வீசப்பட்ட சாரதி – பலரின் உயிரைகாத்த இளைஞர்

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸில் பயணித்த இளைஞன் நந்தன யசரத்ன தடுத்து நிறுத்தி பயணிகளினுயிரை காப்பாற்ரியுள்ளார்.

ஓடிக்கொண்டிருந்த உடுதும்புற பாரிய வளைவில் பேருந்தை செலுத்தும் பொழுது சாரதி கதவு திறக்க வெளியே விழுந்துள்ளார்.

இந்நிலையில் சாரதி இல்லாமையால் பேருந்து பள்ளத்தில் வீழச் சென்றது. அப்போது பஸ்ஸில் பயனம் செய்த குறித்த இளைஞன் உடனடியாக சாரதியின் கதிரையில் குதித்து பிரேக் ஐ அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அதிகளவான பயணிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டையடுத்து நந்தன யசரத்ன எனும் அந்த இளைஞருக்கு பயணிகள் அனைவரும் தமது உயிரை காத்தமைக்காக பாராட்டியுள்ளனர்.

Follow on social media

Leave a Reply