மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான், தனது மனைவி பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

மோனிகா என்பவரை இமான் 2008-ம் ஆனது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இமான் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி” என்று பதிவு செய்திருக்கிறார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply