டைனோசர் காலத்தைச் சேர்ந்த பாலூட்டி இனம் கண்டுப்பிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

டைனோசர் காலத்தைச் சேர்ந்த முட்டையிடும் பாலூட்டி இனமான எகிட்னா என்ற விலங்கை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா நாட்டிலுள்ள சைக்கிளுப்ஸ் மலையில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட எச்சத்தை ஆய்வு செய்த போது அது எகிட்னா என்ற விலங்கின் எச்சம் என ஆய்வாளர்களினால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ணப்பட்ட ஆய்வில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் டைனோசர் வாழ்ந்த அதே காலத்தில் எகிட்னா என்ற முட்டையிடும் பாலூட்டி இனமும் வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

எகிட்னா உயிரினம் அழிந்துவிட்டதாகவே கருதிய ஆய்வாளர்கள் நெதர்லாந்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமான நேட்ச்சுரல்ஸ்யின் காப்பக அறையில் அந்த எச்சத்தை பாதுகாப்பாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பப்புவா நியூ கினியாவின் அண்டை நாடான இந்தோனேசியாவிலும், விரிந்து பரந்துள்ள சைக்கிளுப்ஸ் மலையில் மீண்டும் மேற்கொள்ளபட்ட ஆய்வில் எகிட்னா என்ற உயிரினம் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது.

20 கோடி ஆண்டுகளை கடந்து வாழ்ந்து வரும் எகிட்னா இனத்தை சேர்ந்த விலங்கை ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்து வெளியிட்டமை வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply