எதுவித பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாமல் டீசலின் விலையை இரு தடவைகள் ரூ.15 ஆல் உயர்த்தியுள்ள தீர்மானத்தில் பொறுப்புள்ளவர்கள் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்திற்குரியது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
செப்டெம்பரில் டீசலின் விலை ரூ.10 இனாலும் ஒக்டோபர் 31 ஆம் திகதி ரூ.5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் தெரிவித்தார்.
டீசலின் விலை குறைக்கப்பட்டால் போக்குவரத்து செலவு குறைக்கப்படும்.
தற்போதைய எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அது இரண்டு வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் ரூ.10 அல்லது ரூ.15 அதிகரிக்கப்படும்.
எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
Follow on social media