2022-ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான ராசிகள் எது தெரியுமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2022ஆம் ஆண்டில் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான ராசிகள் தொகுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது ராசி மகரம்: மிகவும் ஆபத்தான ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மகர ராசிதான். 2022ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் எதற்கும் கவலைப்படாத மனப்பான்மையுடன் தொழில்முறை குற்றவாளிகளாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் எந்த வகையான குற்றத்தையும் சிறப்பாக செய்வார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சற்று பொறுப்பற்றவர்கள் என்பதால், விரைவில் சிக்கிக் கொள்வார்கள்.

இரண்டாவது ராசி சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் சிடுசிடுவென்று சற்று மோசான மனநிலையுடனேயே இருப்பார். இதுவே இவர்களை ஆபத்தான ராசிக்காரர்களுள் ஒன்றாக்குகிறது. சிங்கத்தின் அடையாளத்தைக் கொண்ட இந்த ராசிக்காரர்கள், சுட்டெரிக்கும் சூரியனால் ஆளப்படுகிறார்கள். பெயர் மற்றும் புகழைப் பெறுவதற்காக எந்த ஒரு குற்ற செயலையும் செய்வார்கள். அங்கீகாரம் இவர்கள் விரும்புவது என்பதால், அது எவ்வளவு பெரிய குற்ற செயல் அல்லது ஆபத்தான விஷயங்களையும் செய்தாலும் கிடைக்கும்.

முன்றாவது ராசி விருச்சிகம் : பொறாமை, ஆக்கிரமிப்பு மற்றும் சோகமாக இருக்கும் திறன் ஆகியவை தான் இந்த ராசிக்காரர்களை ஆபத்தான ராசிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற வைக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சூழ்நிலைகள் சரியாக அமையாத போது, இவர்களின் பொறாமை மற்றும் ஆக்கிரமிப்பு குணம் தீங்கு விளைவிக்கிறது.

நான்காவது ராசி தனுசு : ஆபத்தான ராசிகளின் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருப்பது தனுசு. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் இவர்கள் மிகவும் கோபமான சுபாவத்தைக் கொண்டவர்கள். இவர்கள் விரும்புமாறு விஷயங்கள் நடக்காத போது, இவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

ஐந்தாவது ராசி கும்பம் : எதையும் நன்கு கையாளும் மற்றும் ஆக்கிரோஷமான குணத்தைக் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள். இவர்கள் பொதுவாக நன்கு நடந்து கொண்டாலும், பழிவாங்க நினைத்துவிட்டால் அதை திறமையாக செய்வார்கள். இந்த ராசிக்காரர்களின் கவர்ச்சிகரமான தலைமைத்துவ பண்புகள் இவர்களை எதையும் சிறப்பாக கையாள வைக்கிறது. எனவே கும்ப ராசிக்காரர்கள் அமைதியானவராக தெரிந்தாலும், மிகவும் ஆபத்தானவர்கள்.

ஆறாவது ராசி துலாம் : துலாம் ராசிக்காரர்கள் நிதி அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. பொய் சொல்வதில் தேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் பட்டியலின் நடுவில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் மீது அதிக ஆர்வம் என்பதால், பணம் தொடர்பான குற்றங்களில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு இந்த ராசிக்காரர்கள் கவனம் செலுத்தும் மற்றொரு துறை போதைப்பொருள்.

ஏழாவது ராசி மேஷம் : மேஷ ராசிக்காரர்களை அதிகாரம் செய்தால், அது இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு யாரையும் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டளையிடவோ பிடிக்காது. ஒருவேளை அவ்வாறு நடந்தால், அதற்கு இவர்கள் மிகவும் மோசமான முறையில் பதிலடி கொடுப்பார்கள்.

ஏட்டாவது ராசி மீனம் : மீன ராசிக்காரர்களை ஆபத்தானவர்களாக காட்டுவது அவர்களின் எரிச்சல் தான். மீனம் ஒரு நீர் ராசியாக இருந்தாலும், தனிமையில் இருந்தால் அது தீங்கு விளைவிக்கும் மற்றும் தற்கொலைக்கு வழிவகுக்கும். தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவிப்பார்கள தவிர, மற்றவர்களை இவர்கள் காயப்படுத்தமாட்டார்கள். ஆனால் இம்மாதிரியான குணாதியம் மிகவும் ஆபத்தானது.

ஒன்பதாவது ராசி மிதுனம் : மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக ஆபத்தானவர்கள் அல்ல. இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றி தவறு நடப்பதை உணர்ந்தால், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். இந்த குணம் இவர்களை மோசடி அல்லது திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட வைக்கும். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் தங்களை வன்முறைகளில் ஈடுபடுத்துவதில்லை.

பத்தாவது ராசி கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு எதிலும் சிக்கிக் கொள்ளாமல் திறமையாக திருடும் திறன் உள்ளது. சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்கள் ஆபத்தான மற்றும் சட்டவிரோத செயல்களைச் செய்வதில் பரிபூரணமானவர்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே, இவர்களது குற்றம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் அளவுக்கு அதை மிகச் சரியாகச் செயல்படுத்துவார்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் செய்யும் குற்றங்கள் ஹேக்கிங், கொள்ளை, அதோடு ஏமாற்றி விளையாடுவது மற்றும் மோசடி.

பதினொன்னாவது ராசி கடகம் : கடக ராசிக்காரர்கள் மன உறுதியுடன் இல்லாதவர்கள். கோபம் வந்தால் வன்முறைகளை செய்யக்கூடியவர்கள். இவர்களின் மன உறுதியின்மை காரணமாக, இவர்கள் அடிக்கடி கடுமையான குற்றங்களை செய்வார்கள். ஆனால், இவர்களை ஒருவர் தொடர்ச்சியாக அடக்கினால், சிந்திக்கத் தொடங்குவார்கள்.

பனிரெண்டாவது ராசி ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் முரட்டுத்தனமான குணம் கொண்டவர்கள். இந்த குணமே இவர்களை கடுமையான சர்வாதிகாரிகளாக காட்டுகிறது. இவர்கள் ஆதிக்கம் செலுத்த பிறந்தவர்கள். இருப்பினும் இவர்களின் அணுகுமுறை மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக, அவர்கள் மற்றவர்களின் உதவியுடன் தங்கள் வேலையைச் செய்வார்கள்.

Follow on social media
CALL NOW

Leave a Reply