யாழ் புங்குடுதீவில் கரை ஒதுங்கும் ஆபத்தான பொருள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கிவருகிறது.
பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கிவருகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting