கொழும்பை வீழ்த்திய தம்புள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியொன்றில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்த்தாடிய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஒட்டங்களை எடுத்தது.

அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்று கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொடுத்தார்.

பெதும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களைப் பெற்றார்.

இம்ரான் தாஹிர், நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் முதல் விக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே வீழ்ந்தது. துஷ்மந்த சமீர இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆனால் 18 ஓவர்கள் 5 பந்துகளில் 4 விக்கெட்களை இழந்து தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply