கைத்தொலைபேசி மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைமை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம் 20 நிமிடங்களில் குறைந்த கட்டணத்தில் முடிவை பெற்றுக்கொள்ள முடியும். விரைவில் கொரோனா பரிசோதனை முறையாக ரெபிட் பி.சி.ஆர். முறை உள்ளது.
இதில் முடிவு வருவதற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கைத்தொலைபேசி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய புதிய முறையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், கொரோனா வைரஸின் மரபணு கண்டறியப்படுகிறது.
இதில் ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media