மீண்டும் கொரோனா பரவல் – இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86 திரிபான ஜே.என்1 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மக்கள் புதிதாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

Follow on social media
CALL NOW Premium Web Hosting