யாழில் மேலும் இருவருக்கு கொரோனா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 240 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட இருவரும் மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு,

தனிமைப்படுத்தல் நிறைவு செய்யும் தறுவாயில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து மருதனார்மடம் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting