நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பாக குசல் பெரேரா 58 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 44* ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 17 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
கண்டி அணியில் அதிகபட்சமாக ரவி போப்ரா 47 ஓட்டங்களையும், ஜெப்ரி வன்டர்சே 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
Follow on social media