அன்னபூரணி படத்தின் வசூல் – இத்தனை கோடியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ஜெய், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அன்னபூரணி திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களில் அன்னபூரணி திரைப்படம் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. மூன்று நாட்கள் இறுதியில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் 5 நாட்கள் இறுதியில் ரூ. 4 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

புயல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதனால் தான் படத்தின் வசூல் குறைந்துள்ளது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் அன்னபூரணி படத்தின் வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply