நாளை முதல் வானிலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாளையிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

எனவே, ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி நாடு முழுவதும் பல இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply