மட்டன் பிரியாணியில் பூனைக்கறி – வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சென்னைக்கு போறோம் , மட்டன் பிரியாணியை ஒருகை பார்க்கின்றோம் என செல்லும் நம்மவர்கள் ஜாக்கிரதை. ஏனெனில் பலரும் பூனைகளை விட்டில் ஆசையாக வளர்த்துவரும் நிலையில், சென்னையில் மட்டனுடன் சேர்த்து பூனைக்கறியும் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையானதை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் இருந்தாலோ ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகம் உள்ளது.

சென்னையின் பிரபலமான பலரும் வந்துசெல்லக்கூடிய ஓர் பகுதியில் சிலர் பூனைகளை பிடித்து வலையில் அடைத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

அதன் பேரில் அங்கு விரைந்துசென்ற பொலிஸார் 11 பூனைகளை கைப்பற்றி விலங்கு நலப் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக இடம்பெற்ற விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது பல வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படும் பூனைகளை உரிமையாளர்களே தெரியாமல் வலை வைத்து பிடிப்பது மட்டன் இறைச்சியுடன் கலந்து விற்றுவிடுவார்களாம்.

அதேபோல சென்னையில் உள்ள பிரபல வாரச்சந்தையிலும் பூனை இறைச்சியை அதிகம் விற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது பூனை கறியை மட்டனுடன் சேர்த்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

பூனை இறைச்சியும் மட்டன் கறியும் கிட்டதட்ட ஒரே சுவையில் இருப்பதால் மட்டனுடன் பூனை இறைச்சியை மிக்ஸ் செய்யும் போது, அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிடுகிறது.

அதேவேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், இதேபோல சென்னையில் பூனை கறி விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply