மத்திய பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே நேற்று அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Follow on social media