பதுளையில் பேருந்து விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பதுளை – லுணுகலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

லுணுகலை – அடாவத்தை 13வது கொலணி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பேருந்தில் 6 மாணவர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்களுள் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி, லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting