கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியிலுள்ள கந்தன்குளம் பகுதியில் இருபத்தொரு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்டு உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை ,எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னேடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media