கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக ராஜபக்ஷ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி நியமங்களுடன் இனி விளையாட முடியாது என பானுக்க ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வாவிடம் நாம் வினவிய போது, ​​பானுக்க ராஜபக்ஷவிடம் இருந்து இதுவரையில் அவ்வாறானதொரு கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply