காலை நேரத்தில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக 1 கோப்பை நீரை அருந்த வேண்டும் என மருத்துவர்களால் கூறப்படுகின்றது
இது பலவிதமான அற்புதங்களை உடலில் செய்கிறது.
காலையில் டீ அல்லது காபியை குடிக்கும்போது அதிலுள்ள பிஹெச்ன் அளவு வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யும், அதுவே தண்ணீரை குடிக்கும்போது வயிற்றில் சமநிலை தன்மை ஏற்பத்தும்.
அதிக சூடான அல்லது குளிர்ந்த நீரை குடிக்காமல் அறை வெப்பநிலையில் சாதாரணமாக உள்ள தண்ணீரை குடிக்க வேண்டும்.
அவ்வாறு தினமும் தண்ணீரை குடிக்கும்பொழுது அல்சர், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது அதுமட்டுமின்றி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமடைகிறது.
Follow on social media