அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ள 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தன்னிடம் பெற்ற 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply