காஸாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் – குழந்தைகள் உட்பட பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வடக்கு காஸா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த காட்சிகளையும் பிபிசி பதிவேற்றம் செய்துள்ளது.

இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலால் பல வாகனங்கள் சேதமடைந்து எரிந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply