அதிர்ஷ்ட மழையில் ஜொலிக்க போகும் மூன்று ராசிக்காரர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜோதிடத்தில் அனைத்து ராசிகளும் நான்கு தத்துவ கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குறித்த நான்கு கூறுகள் காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமி. மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகியவை காற்று தத்துவதுடன் தொடர்புடையவை.

மேலும் இதில், மிதுன ராசிக்கு அதிபதி புதன், துலாம் ராசிக்கு சுக்கிரன் மற்றும் கும்ப ராசிக்கு அதிபரி சனி பகவான். இந்த ராசிகளின் அதிபதிகள் வேறு வேறாக இருக்கலாம் என்றாலும், கிரகங்களின் தத்துவங்களில் ஒற்றுமை உண்டு இதனுடன், சனி-சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து குவிக்கின்றன.

மிதுனம்: மிதுன ராசி காற்று தத்துவத்தின் அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்டது. இந்த ராசிக்கு அதிபதி கிரகம் புதன். புதன் கிரகம் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் கற்பனைத்திறன் உடையவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்தி எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பார்கள். இது தவிர மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் சிறப்பு அருளும் உண்டு. இதன் காரணமாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதால் எப்போதும் நிலைமை சாதகமாகவே இருக்கும்.

துலாம் : துலாம் ராசியும் காற்று தத்துவத்தின் அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்டதுதான். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசியில் சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துவதால், இந்த ராசிக்காரர்கள் கலை மற்றும் அழகில் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறார்கள். சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்கள் திரைத்துறையில் அபரிமிதமான முன்னேற்றம் அடைகிறார்கள்.

இதேவேளை, துலாம் ராசிக்காரர்கள் சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் தவறான முடிவுகளை எடுப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எப்பொழுதும் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

கும்பம்: ஜோதிடத்தில் சனியின் அடையாளமாக கும்பம் கருதப்படுகிறது. காற்று தத்துவத்தின் அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்ட இந்த ராசியின் தெய்வம் சனி தேவன். கும்ப ராசியில் சனி வலுவாக உள்ளது. கடவுளின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் துணை நிற்கும்.

எந்தவொரு வேலையிலும் அவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள். பல சமயங்களில் கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களை தவறாக மதிப்பிடுவதால்,.சில சமயங்களில் அவர்களுக்குப் பிரச்சனையாகி விடுகிறது. இருப்பினும், இந்த பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply