வவுனியா வாள்வெட்டுத் தாக்குதலில் மேலுமொருவர் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ச.சுகந்தன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத கர்ப்பிணியான பாத்திமா என்ற 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் கணவன் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting