நல்லூர் திருவிழா குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்தை தடை செய்ய இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வீதி மூடப்பட்டிருக்கும் குறித்த காலப்பகுதியில், பருத்தித்துறை வீதி வழியாக பயணிக்கும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting