வாழைப்பழம் தொண்டையில் சிக்கிய நிலையில் கடந்த 5 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி பாடசாலை இடைவேளையின்போது சிறுமி உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். இதன்போதே வாழைப்பழம் தொண்டையில் சிக்கியுள்ளது.
பின்னர் ஆசிரியர்கள் மாணவியை தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பகா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
Follow on social media