உயர்தரப் பரீட்சை பயிற்சி வகுப்புகளுக்கு தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பயிற்சி வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான டியூஷன் வகுப்புகள் நடத்துவது, வகுப்புகள் நடத்துவது, விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இம்மாதம் 7ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மருத்துவமனைகளில் விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply