நடிகர் விஷாலுக்கு அபராதம் – நீதிபதி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ரூ.1 கோடி வரையில் சேவை வரி செலுத்தவில்லை என அவர்மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷாலின் நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டு இருந்தது. நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர் சேவை வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரிகள்.

கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2018 வரையில் சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் விஷால் நேரில் ஆஜராகி தன்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. வழக்கு இதையடுத்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

எனவே குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர அவசியம் இல்லை என வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கூறியதாவது ரூ.500 அபராதம் சேவை வரி அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் வேண்டும் என்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.

வழக்கு தொடர்ந்த பிறகே சேவை வரி தொடர்பான விவரங்களை விஷால் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டின் மீதான தன்மை குறைவாகவே உள்ளதால் வெறும் ரூ.500 அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting