மீனவர்களுக்காக திடீர் விபத்து காப்பீட்டுத் திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கடற்றொழிலை அபிவிருத்தி செய்தல் மற்றும் மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மீனவ சமூகத்திற்கான திடீர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.

புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, இந்த விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் மீனவர்கள் நீண்டகாலமாக தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக இந்த காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

விவசாய காப்பீட்டு சபை ஏற்கனவே பல்வேறு விவசாய மற்றும் விவசாயம் தொடர்பான துறைகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், மீனவ சமூகத்திற்கு தனித்துவமான காப்பீட்டுத் திட்டமாக விவசாய காப்பீட்டு சபையால் இந்த காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, “1990 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் சட்டம்” மூலம் மீனவ சமூகத்திற்கான ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்த சபையிக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அதிகாரங்களின் கீழ், ஆண்டுதோறும் செயற்படுத்த கூடிய வகையில் இந்த திடீர் விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற வானிலையால் அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள், இயலாமை மற்றும் உயிர் இழப்பு போன்றவற்றின் போது, அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம், நன்மைகளை வழங்கும்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting