வவுனியாவில் கோர விபத்து – ஒருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01) இரவு 7.40 மணியளவில் கெப் ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் இராணுவ சிற்றூண்டிசாலைக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்று முழுதாக சேதமடைந்துள்ளதுடன் கெப் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயதுமதிக்கத்தக்க ரஐீவன் வவுனியா முச்சக்கரவண்டி தரிப்பிடம் என்ற நபரே உயிரிழந்தவராவார்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply