AC எரிவாயு குழாய் வெடித்து இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஏசி இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும் போது, அதிலிருந்த எரிவாயு குழாய் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கண்டி- இரண்டாம் இராஜசிங்க மாவத்தையில் இன்று பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பராமரிப்பு தொழிநுட்பவியலாளரான 24 வயதுடைய மொஹமட் ஹிசாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது எரிகாயங்களுக்கு உள்ளான அவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting