முல்லைத்தீவில் பாடசாலைக்குள் மாணவிகள் துஷ்பிரயோகம் – யாழ் ஆசிரியர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் சிக்கிய விவகாரத்தில், மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவிகள சிலருடன் எல்லைமீறி நடந்த காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் ஆசிரியர் பதிவு செய்து வைத்ததே, அவர் சிக்க காரணமாக அமைந்ததாக சொல்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றிலேயே இந்த கொடுமை நடந்தது.

யாழ் மாவட்டத்தின், வடமராட்சி பகுதியை சேர்ந்த 26 வயதான விஞ்ஞான பாட ஆசிரியரே கைதாகியுள்ளார். அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியரின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ வழியாகவே அவர் சிக்கிதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரண்டு மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோக்கள் ஆசிரியரின் கையடக்க தொலைபேசியிலிருந்து வேறு தரப்பிற்கு சென்றதாக தெரிகிறது.

ஆசிரியர், இரண்டு மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், மற்றும் சில மாணவிகளுடன் இணையத்தளத்தில் சட் செய்த விபரங்களை, யாரோ ஒரு தரப்பு முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனைக்கு ஆவணமாக அனுப்பி வைத்துள்ளது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட வலயக்கல்வி பணிமணை, அது குறித்த அறிக்கையை மாகாண கல்வியமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து, ஆசிரியர் பாடசாலையில் கற்பிக்க தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளின் கீழ், கடந்த 24ஆம் திகதி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் கடந்த 25ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கும், ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்குமிடைப்பட்ட கால இடைவெளி குறித்து, பிரதேச மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து துரித விசாரணை நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளை வலிறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply