யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியான இளைஞன் ,தனது முச்சக்கர வண்டியினுள் வைத்து சிறுவனுக்கு மது அருந்த கொடுத்துள்ளார்.
அதனை அறிந்த சிறுவனின் தாயார், அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media