மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி விநோதமாக நடக்கும் திருமணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகளவில் விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. அதில் பல திருமண மரபுகள் நமக்கு அச்சரியத்தையும், சுவராஸ்யத்தையும் தருகின்றன.

அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில், மக்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வதுதான் அவர்களின் வழக்கம்.

இந்த மரபு இந்த பழங்குடியினரின் அடையாளம். வோடபே பழங்குடியின மக்களின் முதல் திருமணம் குடும்பத்தின் விருப்பப்படி நடக்கிறது.

2வது திருமணத்தின் போது, ​​அவர்கள் மற்ற மனைவிகளைத் தன்வசப்படுத்த வேண்டும். அவர்கள் பிறருடைய மனைவிகளை தன்வசப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு மறுமணம் செய்ய உரிமை இல்லை. அதனால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள ஒரே வழி இதுதான்.

மேலும் இந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கரேவோல் திருவிழாவை நடத்துகிறார்கள். இந்த திருவிழாவின் போது பாரம்பரிய ஆடை அணிந்து முகத்திற்கு வண்ணம் தீட்டுவார்கள்.

இந்த குழு நிகழ்வின் போது, ​​இளைஞர்கள் மற்ற பெண்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்வர்கள்.

ஒருவரது மனைவி வேறொரு ஆணுடன் சென்றுவிட்டார், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply