கம்பஹாவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கம்பஹா, கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.திலினி என்ற மாணவியே அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என்றும் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media