முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் இன்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனைத்து சிங்கள பௌத்த மக்களையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து கல்கமுவ சாந்தபோதி தேரர் நேற்று முன்தினம் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகிய 3 பேருக்கு எதிராகவே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டளர்கள் இணைத்து பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவவுள்ளதாக தகவல் கிடைக்ப்பெற்றுள்ளதாக கல்கமுவ சாந்தபோதி தேரர் குறிப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இதற்கு எதிராக சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media