பண்டாரவளை – பூனாகலை, பெட்டிக்கால பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபத் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) காலை 05 மணியளவில் வீட்டிலிருந்து பால் சேகரிக்கச் சென்ற போதே இந்த வயோதிபத் தாயை காட்டு யானை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயான 72 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
Follow on social media