க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது பாடசாலை மாணவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், ´பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின், பாடசாலை அமைப்பில் உள்ள 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டன.
தற்போது க.பொ.த உயர் மாணவர்களுக்கான பரீட்சையில், பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் முடிவடைந்துள்ளன. அந்த மாணவர்கள் எந்தவொரு மருத்துவ அதிகாரி பிரிவிலும் தமக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.´ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Follow on social media