கள்ளக்காதலனிடம் 26 லட்சத்தை இழந்த பெண் உத்தியோகத்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை கணவரின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப் போவதாகவும், இணையத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கப்பமாக பெற்று வந்த ஆசாமியை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

பதவியா, ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த முறைப்பாட்டை செய்தார்.

முறைப்பாடு செய்த பெண் அரச உத்தியோகத்தர் குளியாப்பிட்டிய நாரம்வல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தனர். இருவரும் உல்லாசமாக இருந்த போது, பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை கள்ளக்காதலன் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்து வைத்திருந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல் பெண்ணை பயமுறுத்தி பணம் பெற ஆரம்பித்துள்ளார். சந்தேகநபரால் வழங்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

பணம் வைப்பிலிடப்படா விட்டால், இருவரும் உல்லாசம் அனுபவித்த புகைப்படங்களை பெண்ணின் கணவனுக்கு அனுப்புவதுடன், இணையத்திலும் வெளியிடப் போவதாக அந்த ஆசாமி மிரட்டியுள்ளார்.

விவகாரம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, கள்ளக்காதலனின் மிரட்டலிற்கு பயந்து வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் சுமார் 27 இலட்சம் ரூபாவை இவ்வாறு வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், குறித்த பெண் 50 வயதுடைய ஸ்ரீபுர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த 11ஆம் திகதி ஸ்ரீபுர பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Follow on social media
CALL NOW

Leave a Reply