கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹந்தபானாகல பிரதேசத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த சடலம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Follow on social media