அயல் வீட்டு நாயை காப்பற்ற தன் உயிரை விட்ட பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த வீரதுங்க ஆராச்சி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நோயாளியின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை தானமாக அளித்து மேலும் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

அதன்படி, இவரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting